search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருஈங்கோய்மலை காவிரி ஆற்றில் மகா புஷ்கர விழாவையொட்டி பக்தர்கள் புனித நீராடிய காட்சி.
    X
    திருஈங்கோய்மலை காவிரி ஆற்றில் மகா புஷ்கர விழாவையொட்டி பக்தர்கள் புனித நீராடிய காட்சி.

    திருஈங்கோய்மலை காவிரி ஆற்றில் மகா புஷ்கர விழா

    தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை காவிரியாற்றில் மகா புஷ்கர விழா நடைபெற்றது.
    கடந்த 12-ந்தேதியிலிருந்து காவிரி கரையோரப்பகுதிகளில் மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து புனித நீராடி வருகின்றனர். அதன்படி கடந்த 17-ந்தேதி தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் கிராமத்தில் காவிரி கரையில் மகா புஷ்கர விழா நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக தொட்டியம் அருகே காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள திருஈங்கோய்மலை லலிதாம்பிகை மடத்தின் சார்பில் மகா புஷ்கர விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு லலிதாம்பிகை மடத்தை சேர்ந்த யோகினிகள் வித்யாம்பாள் சரஸ்வதி, சாம்பவி வித்யாம்பாள், ஜெயம்பாசரஸ்வதி, சிவசங்கரி அம்பா ஆகியோர் காவிரி பாதுகாப்புக்குழுவை சேர்ந்த ராமநாதசுவாமிகள், அப்பர் சுவாமிகள் முன்னிலையில் காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து சிறப்பு வழிபாடுகளும், மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் ஜீவராசிகள் இன்னலின்றி வாழ்ந்திடவும் பிரார்த்தனை நடைபெற்றது.

    பூஜிக்கப்பட்ட புனித நீரை யோகினிகள் காவிரி ஆற்றில் அபிஷேகம் செய்து காவிரித்தாயை வழிபட்டனர். அதனை தொடர்ந்து ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். விழாவில் திருச்சி, முசிறி, தொட்டியம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடினர்.
    Next Story
    ×