search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது
    X

    தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது

    மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா 22-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம்(அக்டோபர்) 4- ந் தேதி வரை விழா நடக்கிறது.

    22-ந் தேதி அங்குரார்பணத்துடன் விழா தொடங்குகிறது. 23-ந் தேதி காலை கொடியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அன்னம், சிம்மம், அனுமார், கருடன், யானை, குதிரை மற்றும் சேஷ வாகனத்தில் சாமி எழுந்தருளுகின்றார்.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 1-ந் தேதி காலை 8.45 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுகிறார்.

    மறுநாள்(2-ந் தேதி) காலை திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும் இரவில் பூச்சப்பரத்தில் எழுந்தருளலும் நடக்கும். மேலும் 3-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. 4-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா முடிவடைகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×