search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காவிரி புஷ்கரம்: தானம் செய்யுங்கள்
    X

    காவிரி புஷ்கரம்: தானம் செய்யுங்கள்

    காவிரி புஷ்கரம் அன்று காவிரியில் நீராடி, காவிரித்தாயின் துதியைச் சொல்லி, காவிரியை வழிபட்ட பிறகு, அன்னதானம், ஆடைதானம், இரண்யம் (காசுகள்) தானம் செய்வதுடன் பித்ரு தர்ப்பணமும் கொடுக்கலாம்.
    காவிரி புஷ்கர விழா செப்டம்பர் 12-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடபெறுகிறது. முதல் நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். தொடர்ந்து மடாதிபதிகள், குருநாதர்கள், ஆன்மிக அருளாளர்கள் காவிரித் தாயின் திருவுருவப்படத்துடன் துலாக்கட்டத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுத்திரும்பவும் துலாக்கட்டத்துக்கே வந்து சேருவார்கள்.

    பிறகு அங்கே திரண்டிருக்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள். தினமும் இரு வேளைகளிலும் ஆசி சுவாமி புறப்பாடு, வேத பாராயணம், திருமுறை பாராயணம், நாம சங்கீர்த் தனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. மாலையில் காவிரியில் ஆரத்தி நடைபெறும். புஷ்பர விழாவின் தொடக்க நாளிலும் நிறைவு நாளிலும் அருள்மிகு அபயாம்பிகை சமெத ஸ்ரீமயூரநாதப் பெருமானும், ஸ்ரீவதான்யேஸ்வரரும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு தீர்த்தம் அருள்வார்கள்.

    அந்த நேரத்தில் காவிரியில் நீராடி, காவிரித்தாயின் துதியைச் சொல்லி, காவிரியை வழிபட்ட பிறகு, மகாசங்கல்பம் செய்துகொண்டு கன்யா பூஜை, குலதேவதா பூஜை செய்து, அன்னதானம், ஆடைதானம், இரண்யம் (காசுகள்) தானம் செய்வதுடன் பித்ரு தர்ப்பணமும் கொடுக்கலாம்.

    Next Story
    ×