search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயிலாடுதுறையில் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்
    X

    மயிலாடுதுறையில் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்

    மயிலாடுதுறையில் தரிசிக்க வேண்டிய சில முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அந்த ஆலயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    * ஸ்ரீமயூரநாதர் ஆலயம் ஸ்ரீவதான்யேஸ்வரன் ஆலயத்திற்கு மேற்கில் ஸ்ரீஐயாநப்பர் ஆலயம்.

    * கூறைநாடு என்னும் நகர்ப்பகுதியில் புனுகு பூனை பலன் பெற்ற ஸ்ரீபுனுகீஸ்வரன் ஆலயம்.

    * காவிரி பாலத்திற்குத் தென்கரையில் ஸ்ரீபாலக்கரை விஸ்வநாதர் கோவில்.

    * காவிரி வடகரையில் ஸ்ரீகன்வ மகரிஷியால் பூஜை செய்யப்பட்ட வள்ளல் பெருமான் ஸ்ரீவிஸ்வநாதர் கோவில்.

    * காவிரி நதியின் கிழக்குப்பாபத்துப்படித்துறை திம்மநாயகன் படித்துறை எனப்படுகிறது. இங்கும் ஒரு காசிவிஸ்வநாதன் எழுந்தருளி உள்ளார்.

    * மயிலாடுதுறையின் பெரிய கோவில் எனப்படுகிற மயூரநாதஸ்வாமி கோவிலின் வடக்கு வாயில் அருகே உள்ள (உட்பிரகார தொடக்கம்) விஸ்வநாதர் கோவில்.

    * தருமபுரமடத்திற்குச் சொந்தமான கடைத்தெரு காசி விஸ்வநாதர் கோயில் காவிரியின் தென்புறத்தில் உள்ளது. மேற்சொன்ன ஐந்து கோவில்களுக்கும் உள்ள சிறப்பு எல்லா கோவில் விமானங்களும் (கோபுரங்கள்) காசியில் உள்ள காசி விஸ்வநாதருடையது போலவே இருக்கும்.

    * பல்லவராயன் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரன் ஆலயம்.

    * கருங்குயில் நாதன் பேட்டை ஸ்ரீசக்தி புரீஸ்வரன் சிவாலயம். இந்த சிவனை நவசக்திகளில் மாகேஸ்வரி பூஜை செய்து பேறு பெற்றதாக வரலாறு.

    * வள்ளலார் கோவிலுக்கும் பின் பகுதியில் கிழக்கு திக்காக சக்தி பைரவி பூஜை செய்த ஸ்ரீபசுபதீச்வரம் என்ற அருள்மிகு பசுபதீஸ்வர் ஆலயமும் தரிசிக்க வேண்டியவை.

    Next Story
    ×