search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கங்கை காவிரியை துணை கொண்ட பரிமளரங்கன்
    X

    கங்கை காவிரியை துணை கொண்ட பரிமளரங்கன்

    பக்தர்களுக்கு அருள் புரிந்தால் போதும் என்றிட பெருமாளும், பரிமளரங்கநாதன் என்ற பெயரில் காவிரித்தாயார் தலைப்பகுதியிலும் கங்கை நதிகால் பகுதியிலும் அமர்ந்திருக்க சயனத்திருக் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
    மயிலாடுதுறை என்னும் ஆன்மீக நகரின் கிழக்குப் பாகத்தில் காவிரியும் வங்கக் கடலும் உரசிக் கொள்ளும் இடத்தில் திருஇந்தளூர் என்னும் தலத்தில் 108 திருப்பதிகளில் ஒன்று அமைந்திருப்பதை அனைவரும் அறிந்து புஷ்கர காலத்தில் மறவாமல் அந்த புருஷோத்தமனைத் தரிசித்து வரவேண்டும்.

    இந்திரனாக விரும்பிய அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாக ஏகாதசி விரதத்தைக் கடைபிடித்து வந்தான். ஏகாதசி விரதம் முடித்த மறுநாள் துவாதசியில் நல்ல நேரத்தில் பெருமாள் பிரசாதம் உண்டு விரதம் நிறைவு செய்வான். நூறாவது விரதம் முடிக்கும் வேளையில் மாபெரும் விழாவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க தேவர்கள், அனைவரும் மனக்கலக்கத்தில் இருந்தனர். பூமியில் நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அம்பரீசன் 100-வது விரதம் முடித்து விட்டால் இந்திர பதவி கூட கிடைத்து விடும்.

    மானுடனுக்கு இந்திர பதவி கிடைத்து விட்டால் தேவர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும் என்று பயந்து துர்வாச முனிவரிடம் இதைத் தடுக்கும்படி கேட்டான். அவரும் பூமிக்கு வந்த மன்னனிடம் விரதம் முடித்துச் சாப்பிட அமரும் வேளையில் வந்து தானும் இன்று விருந்துக்கு வருவதாக கூறிவிட்டு காவிரியில் முழுகச் சென்று தாமதமாக வர எண்ணினார்.

    துவாதசி முடிய சில நிமிடங்களே உள்ள நிலையில் தன் தலைமை தேவ பண்டிதரிடம் யோசனை கேட்க மும்முறை நீர் அருந்திவிட விரதம் நிறைவடையும் என்றிட அப்படியே செய்து விட்டு முனிவருக்காகக் காத்திருந்தான். அதை தன் ஞான திருஷ்டியால் அறிந்த முனிவர் ஒரு பூதத்தை ஏவி அம்பரீசனைக் கொல்லும்படி செய்ய அவன் பெருமாளிடம் சரணடைந்தான். துர்வாசரும் பெருமாளிடம் மன்னிப்பு வேண்டினான்.

    நூறு ஏகாதசி விரதம் முடித்த மன்னனுக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தால் போதும் என்றிட பெருமாளும், பரிமளரங்கநாதன் என்ற பெயரில் காவிரித்தாயார் தலைப்பகுதியிலும் கங்கை நதிகால் பகுதியிலும் அமர்ந்திருக்க சயனத்திருக் கோலத்தில் சேவை சாதிக்கிறார். மூலவர்- பரிமள ரங்கநாதர், மருவினியமைந்தன் சுகந்தவன நாதர் வீர சயணத்திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
    தாயார் பரிமள ரங்க நாயகி, சந்திரசாப விமோச வல்லி, சந்திர தீர்த்தம் விமானம் வேதசக்ர விமானம்.

    இத்தலத்தில் துவார பாலகர்கள் ஆழ்வார்கள், பன்னிருவந்து ஆண்டாள், விஷ்வக்சேனர் சக்கரத்தாழ்வார், நரசிம்மர், சந்திரன், கருடன், ராமபிராண், அனுமன், சூரியன், சேனை முதலிய சன்னதிகள் உள்ளன. குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் மூலவர் அருகில் உள்ள சந்தான கோபாலரை வேண்டினால் பலன் கிடைக்கும் என்கின்றனர்.

    ஐப்பசி மாதம் முழுவதும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசிக்க இத்தலமே விழாக்கோலம் பூண்டிருக்கும். காவிரி நதி கடலில் சங்கமிக்கும் இந்த காவிரிப் பூம்பட்டி னத்தில் தீர்த்த உத்சவம் புகழ் பெற்றது. திருமங்கையாழ்வார் எம்பெருமானை மங்களா சாசனம் செய்துள்ளார்.

    11 பாகரங்களைப் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார் இவரைச் சேவிக்க வந்த போது நேரம் முடிந்து ஆலயக் கதவுகள் மூடப்பட்ட போது பகவானைச் சேவிக்க முடியவில்லையே என்று துடித்துப் போனஆழ்வார் வாழ்ந்தே போம் நீரே என்று பகவானைப் பார்த்துக் கூறிய இடம் திருஇந்தளூர். சுகந்தவனம் என்றும் இந்த ஊருக்குப் பெயர் வழக்கத்தில் இருந்தது. மாயவரத்தில் ஒரு அரங்கன் பள்ளி கொண்டிருப்பதைக் கானவாரீர்.
    Next Story
    ×