search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி பெருந்திருவிழா 23-ந்தேதி தொடங்குகிறது
    X

    தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி பெருந்திருவிழா 23-ந்தேதி தொடங்குகிறது

    மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது புரட்டாசி பெருந்திருவிழாவாகும். இந்த விழாவானது வருகிற 23-ந் தேதி புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு பெருமாள் அன்னவாகனத்தில் எழுந்தருளும் புறப்பாடு நடைபெறும்.

    தொடர்ந்து மறுநாள் (24-ந்தேதி) காலையில் கிருஷ்ணா அவதாரமும், இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடும், 25-ந்தேதி காலை ராமாவதாரமும், இரவு அனுமார் வாகன புறப்பாடும், 26-ந்தேதி காலை கஜேந்திர மோட்சமும், இரவு பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ந்தேதி காலை ராஜாங்க சேவையும், இரவு சேஷ வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். 28-ந் தேதி காலை காளிங்க நர்த்தனமும், இரவு மோகனா அவதாரத்திலும் தொடர்ந்து யானை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார்.

    9-ந்தேதி காலை சேஷ சயனமும், இரவு புஷ்ப விமானத்திலும் சுவாமி காட்சி தருகிறார். 30-ந்தேதி காலையில் வெண்ணெய் தாழியும், அன்று இரவு குதிரை வாகனத்திலும், அக்டோபர் 1-ந்தேதி காலையில் திருத்தேரோட்டமும், அன்று இரவு பூப்பல்லக்கிலும் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 2-ந்தேதி காலை திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு பூப்பல்லக்கும் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெற்று, மறுநாள் 4-ந்தேதி உற்சவ சாந்தியுடன் புரட்டாசி பெருந்திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×