search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சத சண்டி பெருவேள்வி இன்று தொடங்குகிறது
    X

    உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சத சண்டி பெருவேள்வி இன்று தொடங்குகிறது

    திருச்சி உறையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான சத சண்டி பெரு வேள்வி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
    திருச்சி உறையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சத சண்டி பெரு வேள்வி நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி இந்த ஆண்டு சத சண்டி பெரு வேள்வி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    தொடர்ந்து 15-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வெக்காளி அம்மனிடம் அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை தீப வழிபாடு, குடம் வழிபாடு, தேவியர் போற்றி வழிபாடு ஆகியவை நடக்கின்றன.

    நாளை(புதன் கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை முதற்கால பூஜை நடக்கிறது. மலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை 2-ம் கால பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை 3-ம் கால பூஜையும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை 4-ம் கால பூஜையும் நடக்கிறது.

    15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை 5-ம் கால பூஜையும், சுமங்கலி வழிபாடும் நடக்கிறது. மதியம் 12.15 மணிக்கு பெருவேள்வி நிறைவு தீப வழிபாடு நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீப வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் முல்லை, ஜெயப்பிரியா ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×