search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.
    X
    கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    திட்டக்குடி அருகே கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்

    திட்டக்குடி அருகே கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திட்டக்குடி வட்டம் ஆவட்டி அடுத்த கல்லூர் கிராமத்தில் கருப்பண்ணசாமி கோவில் கட்ட அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கட்டுமான பணிகள் முடிவடைந்து பல வர்ணங்கள் பூசப்பட்டு கோவில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி கோவிலில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கடந்த 6-ந்தேதி கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. இதையடுத்து நாடிசந்தானம், தத்துவார்ச்சனை யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நாளான நேற்று காலை யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கருப்பண்ணசாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் கணேசன் எம்.எல்.ஏ, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் ஜெயின் மற்றும் ஆவட்டியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×