search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்?
    X

    சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்?

    அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன.
    இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன.

    பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை? ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது.

    அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி. உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது.

    இது இப்போது உனக்கு வேண்டாம். உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு. குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றில் தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம் ஞானப்பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் முருகக்கடவுளின் கோபம் கூறும் செய்தி.
    Next Story
    ×