search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முள்ளக்காடு ஸ்ரீவடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா
    X

    முள்ளக்காடு ஸ்ரீவடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா

    தூத்துக்குடி முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவடபத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா இன்று (5-ந்தேதி) நடைபெற்றது.
    தூத்துக்குடி முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவடபத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா இன்று (5-ந்தேதி) நடைபெற்றது. காலை 7 மணிக்கு நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை சென்று புனிதநீர் கொண்டு வரப்படுகிறது. 12 மணிக்கு நையாண்டி மேளம், வாடிப்பட்டி தம்பாமேளம், மார்த்தாண்டம் செண்டாமேளத்துடன் அம்பாளுக்கு ஓமகுண்ட பூஜையுடன் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

    காலையிலும், மதியமும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை குழுவினரின் வில்லிசை, 8 மணிக்கு கரகாட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து நேமி‌ஷம், முளைப்பாரி எடுத்து வரப்படுகிறது. 10 மணிக்கு அம்பாளுக்கு விசே‌ஷ தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்துடன் அம்பாள் நகர்வலம் வருதல் நடைபெறுகிறது.

    நாளை (6-ந்தேதி) காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், 1 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் , விசே‌ஷ பூஜை நடைபெற்று முளைபாரி கரைத்தலுடன் கொடை விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்ம கர்த்தா சேகர் என்ற சந்திரசேகர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×