search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிட்டுக்கு மண் சுமந்த லீலை: பாண்டிய மன்னனாக குன்றத்து முருகன் பங்கேற்பு
    X

    பிட்டுக்கு மண் சுமந்த லீலை: பாண்டிய மன்னனாக குன்றத்து முருகன் பங்கேற்பு

    பிட்டுக்கு மண் சுமந்த லீலை நிறைவு பெறுவதை தொடர்ந்து வருகிற 6-ந்தேதி மதியம் 3 மணி வரை மதுரையிலேயே தங்கி இருந்து தெய்வானையுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 2-ந்தேதி சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது. இதில் பாண்டிய மன்னனாக முருகப் பெருமான் பங்கேற்கிறார்.

    இதனையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலையில் தெய்வானையுடன் முருகப் பெருமான் பாண்டிய மன்னனாக புறப்பட்டு செல்லுகிறார். அன்று திருப்பரங்குன்றம் கோவில் முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரையிலுமாக பக்தர்கள் ஆங்காங்கே திருக்கண் மண்டகப்படி அமைத்து சாமியை வழிபடுகின்றனர்.

    பிட்டுக்கு மண் சுமந்த லீலை நிறைவு பெறுவதை தொடர்ந்து வருகிற 6-ந்தேதி மதியம் 3 மணி வரை மதுரையிலேயே தங்கி இருந்து தெய்வானையுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

    அதன்பின்பு மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் இருப்பிடம் நோக்கி புறப்பட்டு வருகிறார். வரும் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள திருக்கண் மண்டகப்படிகளில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
    Next Story
    ×