search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா: குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரில் வீதிஉலா
    X

    திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா: குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரில் வீதிஉலா

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    6-ம் திருநாளான நேற்று மாலையில் கீழரத வீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி அம்பாளுக்கும், ஜெயந்திநாதருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமி- அம்பாள் மேல கோவிலுக்கு எழுந்தருளினர். பின்னர் இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் அம்பாலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×