search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரபல ஸ்படிக லிங்கங்கள்
    X

    பிரபல ஸ்படிக லிங்கங்கள்

    ராமேஸ்வரம் தலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ஸ்படிக லிங்க தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    தென்னகத்துக்கு ஆதிசங்கரர் மூலமாக ஸ்படிகம் அறிமுகமானதாக செய்தி உண்டு. அதாவது ஆதிசங்கரர் கயிலாய மலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வழியில் காட்சி தந்த சிவபெருமானால் அவருக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்கள் தரப்பட்டன. அவை முக்திலிங்கம், வரலிங்கம், மோட்சலிங்கம், போகலிங்கம், யோகலிங்கம் என்பனவாகும்.

    அவற்றை பெற்ற ஆதிசங்கரர், சிவபெருமான் அருளியபடி ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார். அவற்றில் முக்தி லிங்கம் கேதார்நாத்திலும், வரலிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்டத்திலும், மோட்ச லிங்கம் சிதம்பரத்திலும், போக லிங்கம் கர்நாடகா சிருங்கேரியிலும், யோக லிங்கம் காஞ்சீபுரத்திலும் அமைக்கப்பட்டன.



    சிதம்பரத்தில் சந்திர மவுலீஸ்வரராகவும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலிலும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும், ராமேஸ்வரத்திலும் ஸ்படிக லிங்கங்கள் அருளாட்சி செய்து வருகின்றன. முக்கியமாக ராமேஸ்வரம் தலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ஸ்படிக லிங்க தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    விபீஷணனால் கொண்டு வரப்பட்டதோடு, ராமரும் சீதையும் பூஜித்த விஷேச லிங்கமாகவும் இது கருதப்படுகிறது. திருவெண்காடு தலத்திலும், திருநெல்வேலி சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்க வழிபாடு பிரசித்தம். தன்னருகில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியதால், ஸ்படிகமானது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.
    Next Story
    ×