search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா 20-ந்தேதி தொடங்குகிறது
    X

    திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா 20-ந்தேதி தொடங்குகிறது

    நெல்லை மாவட்டம் திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
    நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெரு சுடலை ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் 2-வது வாரத்தில் கொடை விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான கொடை விழா வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.

    அதனை முன்னிட்டு 20-ந் தேதி காலை 8 மணிக்கு சிறப்பு பூஜை, பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், தொடர்ந்து மாலை பெண்களுக்கான கோலப்போட்டி, இரவு பல்சுவை கலை போட்டிகள், சமய சொற்பொழிவு மற்றும் திரைப்பட மெல்லிசை கச்சேரி நடைபெறும்.

    21-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை சமய சொற்பொழிவு, இரவு சிறப்பு சுமங்கலி பூஜை, கலை நிகழ்ச்சிகள், சமூக நாடகம் ஆகியவை நடைபெறுகிறது. 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் போட்டி, இரவு சமய சொற்பொழிவு, 1008 திருவிளக்கு பூஜை, இன்னிசை கச்சேரி, 23-ந் தேதி (புதன்கிழமை) காலையில் கும்பாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, சமய சொற்பொழிவு, வில்லிசை, மாகாப்பு, அலங் கார பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஓவியப்போட்டி, மதியம் சமையல் போட்டி, மாலையில் சமய சொற்பொழிவு, இரவு பள்ளி மாணவ- மாணவிகளின் பரத நாட்டியம், சிறப்பு அன்னதானம், பால்குட ஊர்வலம், கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வில்லிசை, மஞ்சள் பெட்டி ஊர்வலம், உச்சிகால பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், இரவு சமய சொற்பொழிவு, கரகாட்டம், சிலம்பு விளையாட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி முட்டை விளையாடுதல், வாண வேடிக்கை மற்றும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×