search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புல்லாங்குழலை இசைப்பதில் ஆர்வம் கொண்ட கிருஷ்ணர்
    X

    புல்லாங்குழலை இசைப்பதில் ஆர்வம் கொண்ட கிருஷ்ணர்

    அழியக்கூடிய இந்த உடலை ‘கிருஷ்ண சேவை’க்காக அர்ப்பணித்துவிட்டால் இந்தப் பூதவுடலே புல்லாங்குழல் போல் புனிதமாகிவிடும்.
    கிருஷ்ண பகவான் எப்போதும் புல்லாங்குழலை இசைப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அதிலிருந்து பிறக்கும் இசையில் பசுக்களும், பறவைகளும், விலங்குகளும், புல் முதல் மரம் வரையிலான தாவரங்களும், ஆறுகளும், மலைகளும், கோபியரும், ஏன் அகில உலகங்களும் கட்டுண்டு கிடந்ததை, ‘திவ்விய பிரபந்தம்’ அழகாகப் பாடுகின்றது.

    நமது உடல் ஒன்பது துவாரங்கள் உடையதாக உள்ளது. அவை கழிவுகளை வெளியேற்றப் பயன்படுகின்றன. ஆனால் அழியக்கூடிய இந்த உடலை ‘கிருஷ்ண சேவை’க்காக அர்ப்பணித்துவிட்டால் இந்தப் பூதவுடலே புல்லாங்குழல் போல் புனிதமாகிவிடும்.

    ‘கிருஷ்ண சிந்தனம்’ என்ற ‘பூரகத்தை’ (மூச்சை உள்ளிழுத்தல்) செய்து, ‘கிருஷ்ண தியானம்’ எனப்படும் ‘கும்பகம்’ (மூச்சை உள்ளே அடக்குதல்) பயின்று, ‘கிருஷ்ண நாம கீர்த்தனம்’ எனப்படும் அவனது திருநாமங்களாகிய ‘ரேசகத்தை’ (மூச்சை வெளிவிடுதல்) செய்து யோகியாக மாறிவிடுபவனே உண்மையான கிருஷ்ண பக்தன். அவனுடைய மனதிலுள்ள ‘தீய குணங்கள்’ என்னும் கழிவுகள், தாமாகவே வெளியேறிவிடும்.
    Next Story
    ×