search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருள்வாக்கு சொல்லலாமா?
    X

    அருள்வாக்கு சொல்லலாமா?

    நம் கலாச்சாரத்தில் பல இடங்களில் இப்படி அருள்வாக்கு சொல்வது நடக்கிறது. இதெல்லாம் சரிதானா? இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.
    அருள் நம்மைத் தேடி வருகிறது என்றால் உடனே நாம் வாயை மூடி அமைதியாகிவிட வேண்டும். அருள் நம்மைத் தேடி வருவது என்பது நாம் வளர்வதற்கான ஒரு வாய்ப்பு.

    நமக்குத் தாகமாக இருக்கிறது, நமது தாகம் தணிக்க ஒருவர் தண்ணீர் கொடுக்கிறார், அதை முழுமையாகக் குடிக்க வேண்டுமல்லவா? அதை விட்டுவிட்டு கொடுத்தவர் மேலேயே ‘உஃப்’ என்று துப்பினால் என்னபிரயோஜனம்? நம் முன்னாடி வருபவர் மீது துப்பிக் கொண்டிருந்தால் எப்படி? கூடாது. அந்தத் தண்ணீரை முழுமையாகக் குடித்திட வேண்டும். குடித்தால் உயிர் வளரும்.

    ஏதோ ஒரு சக்தி வந்தால், நம் மக்களுக்கு உடனே அதை வைத்து கடைபரப்பிவிட வேண்டும்! அப்படி செய்யாதீர்கள். 8 வருடம் கழித்து குழந்தை பிறக்கும் என்று சொன்னதால் உங்கள் அம்மாவிற்கு என்னகிடைத்தது? எப்படியோ அந்தக் குழந்தை 8 வருடம் கழித்து பிறக்கத்தான் போகிறது. அதைநீங்கள் ஏன் சொல்ல வேண்டும்?

    வாய்மூடி இருக்க வேண்டும்தானே? அல்லது 8 வருடத்தில் வருவதை 4 வருடத்தில் வருமாறு செய்ய முடியுமா? இதே காரணத்தால்தான், ஈஷாவில் கூட, இந்தமாதிரிமக்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகபலதடைகளை வைத்திருக்கிறோம்.

    உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் செயல் செய்து வருகிறோம். ஆனால் அந்த ஒரு சொட்டு கிடைத்தாலே பலர் கடைவிரித்து விடுவார்கள்.

    எனவே அருள் வரும்போது, அதைஉங்கள் வளர்ச்சிக்காகவும், இந்த உயிர் மலர்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    Next Story
    ×