search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி பரிகார சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    நாகராஜா கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி பரிகார சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

    ராகு - கேது பெயர்ச்சி விழாவையொட்டி நாகராஜா கோவிலில் பரிகார பூஜை

    ராகு- கேது பெயர்ச்சி விழாவையொட்டி நாகராஜா கோவிலில் பரிகார பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ராகு பகவான் சிம்மராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்பராசியில் இருந்து மகர ராசிக்கும் இடம்பெயரும் பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. ராகுவுக்கும், கேதுவுக்கும் பரிகார தலமாக விளங்கும் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 11 மணி அளவில் ராகு- கேது பரிகார சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.30 மணிக்கு பாரிகார சிறப்பு பூஜையும், 12.50 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலையில் இருந்து நாகராஜா கோவிலுக்கு குடும்பம், குடும்பமாக பக்தர்கள் ஏராளமானோர் வந்து ராகு- கேதுவுக்கு பரிகார பூஜை மற்றும் அபிஷேகம் செய்தனர். மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மகர ராசிக்காரர்கள் பரிகாரங்கள் செய்தனர்.

    மேலும் ராகு- கேது பெயர்ச்சியையொட்டி நாகராஜா கோவிலில் சிறப்பு பரிகார அபிஷேக அர்ச்சனை செய்யக்கூடியவர்களுக்கு கட்டணமாக நாகராஜா கோவிலில் ரூ.300 வசூலிக்கப்பட்டது. பரிகார அபிஷேக அர்ச்சனை டிக்கெட் வாங்கி பங்கேற்றவர்களுக்கு பிரசாதமாக தேங்காய்- பழத்தட்டு வழங்கப்பட்டன. நேற்று மட்டும் சுமார் 350 பேர் பரிகார அபிஷேக அர்ச்சனை டிக்கெட் வாங்கி பரிகார பூஜையில் பங்கேற்றதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ராகு- கேது பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பா.பாரதி, கண்காணிப்பாளர் சிவகுமார், நாகராஜா கோவில் மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர். கோவிலில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை இணை ஆணையர் பாரதி நேற்று நேரடியாக பார்வையிட்டார்.
    Next Story
    ×