search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாலட்சுமியின் அஷ்ட சக்திகள்
    X

    மகாலட்சுமியின் அஷ்ட சக்திகள்

    மகாலட்சுமி தன்னை அஷ்ட சக்திகளாக இருத்தி அருள்பாலிப்பதாகவும் ஐதீகம். அத்தகைய அஷ்ட சக்திகளின் பெயர்கள் தெரிந்து கொள்ளலாம்.
    மகாலட்சுமி தன்னை அஷ்ட சக்திகளாக இருத்தி அருள்பாலிப்பதாகவும் ஐதீகம். அத்தகைய அஷ்ட சக்திகளின் பெயர்கள் வருமாறு:

    ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி.

    ஒவ்வொரு யுகத்திலும் மகாலட்சுமியானவள் அஷ்ட லட்சுமிகளின் உருவம் தாங்கி அவதரிப்பதாகவும், அந்தந்த யுகங்களுக்கு ஏற்றவாறு அஷ்ட லட்சுமிகளின் பெயர்களும் மாற்றம் பெறும் எனவும் புராணங்கள் குறிப்பிடு கின்றன.

    கொல்கத்தாவில் அட்சய திருதியை அன்று, ‘ஹல்கத்தா’ என்ற நாளாக லட்சுமி பூஜையை கொண்டாடுவதோடு, களிமண்ணால் செய்யப்பட்ட லட்சுமி உருவத்துக்கு பூஜைகளையும் செய்கிறார்கள். சகல செல்வங்களுக்கும் சொந்தக்காரனான குபேரன் அந்த நாளில்தான் தவம் செய்து, லட்சுமியிடமிருந்து நவ நிதிகளையும் பெற்றான் என்று ‘லட்சுமி தந்திரம்’ குறிப்பிடுகிறது.

    வரலட்சுமி விரதம் :

    தென் மாநிலங்களில் வரலட்சுமி பூஜை என்ற லட்சுமி வழிபாடு கடைப்பிடிக்கப்படு கிறது. ஆந்திராவில் இது சிராவண மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அன்று மகாலட்சுமியை வீடுகளில் எழுந்தருளும்படி வேண்டி, சோடச உபசார பூஜை எனப்படும் 16 வகை உபசாரங்கள் செய்து வழிபடுகிறார்கள்.

    பலவிதமான இனிப்பு பொருட்கள் நிவேதனம் செய்து வழிபடுவதோடு, அன்றைய தினத்தில் பெண்கள், தங்களது மாங்கல்ய பலம் பெருகவும், வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும் விரதமிருந்து பிரார்த்தனை செய்துகொள்வதும் வழக்கமாகும்.
    Next Story
    ×