search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்காஞ்சி கோவிலில் மீனாட்சி அம்மனுக்கு விசேஷ வழிபாடு நடந்த போது எடுத்த படம்.
    X
    திருக்காஞ்சி கோவிலில் மீனாட்சி அம்மனுக்கு விசேஷ வழிபாடு நடந்த போது எடுத்த படம்.

    அம்மன் கோவில்களில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம்

    அம்மன் கோவில்களில் நேற்று ஆடிப்பூர திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை, 18ம் பெருக்கு என அடுத்தடுத்து விசேஷ நாட்களாக இருப்பதால் புதுவையில் உள்ள அம்மன் கோவில்களில் இந்த மாதத்தில் தொடர்ந்து கூழ் ஊற்றுதல், தீச்சட்டி எடுத்தல், அம்மன் வீதி உலா என விழாக்கள் நடைபெற்று வருகிறது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று அம்மன் கோவில்களில் கோலாகல வழிபாடு நடந்தது.

    வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கோவிலில் கங்கவராக நதீஸ்வரர், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்கார, ஆராதனைகளுடன் வழிபாடு நடந்தது. பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி, வளையல் உற்சவம், இரவு அம்மன் வீதி உலா நடந்தது. 1 லட்சம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு நடந்த விசேஷ வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) தெப்ப உற்சவமும், நாளை(வெள்ளிக்கிழமை) விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

    புதுவை உருளையன்பேட்டை பஸ்நிலையம் எதிரில் உள்ள கலியுக பராசக்தி அன்னை கோவிலில் நேற்று காலை பால்குட ஊர்வலம், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு வை-ளையல்கள் வழங்கப்பட்டன. உலகநாயகி அம்மன் கோவிலில் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர், வேதபுரீஸ்வரர் கோவில், நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், புத்து மாரியம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், அரியாங்குப்பம் செங்கழுநீர் அம்மன், முத்தியால் பேட்டை காந்தி வீதி எம்.எஸ்.அக்ரகாரம் வீர ஆஞ்சநேயர், கோதண்டராமர் கோவில், வரத ராஜபெருமாள் கோவில், ராமகிருஷ்ணா நகர் ஹயக்ரீவர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    Next Story
    ×