search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா
    X

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா

    திருச்சி மலைக்கோட்டையில் உள்ள மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமி கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சி மலைக்கோட்டையில் உள்ள மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமி கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. 17-ந்தேதி இரவு கொடியேற்றமும், அம்பாள் கேடயத்தில் புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்பாள் கமலம், அன்னம், காமதேனு, ரிஷபம், சிம்மம் போன்ற வாகனங்களில் வீதி உலா வந்தார்.

    23-ந்தேதி ஆடி அமாவாசையன்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெற்றது. அன்று இரவு அம்பாள் கிளி வாகனத்திலும், 24-ந் தேதி குதிரை வாகனத்திலும் மலைக்கோட்டை உள் வீதிகளிலும், வெளிவீதிகளிலும் உலா வந்தார். இன்று (புதன்கிழமை) ஆடிப்பூர திருவிழாவையொட்டி நேற்று மாலை 6 மணியளவில் மட்டுவார் குழலம்மை சிறப்பு அலங்காரத்தில் சிறிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க மலைக்கோட்டை உள் வீதிகளிலும், வெளி வீதிகளிலும் வலம் வந்து இரவில் கோவிலை வந்தடைந்தார். இன்று மதியம் உள் குளத்தில் தீர்த்தவாரியும், இரவு ரிஷப வாகனம், பூரம் தொழுதல் மற்றும் யதாஸ்தானம் சேர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×