search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நமது கலாசாரத்தில் சடங்குகள் அர்த்தமுள்ளதா?
    X

    நமது கலாசாரத்தில் சடங்குகள் அர்த்தமுள்ளதா?

    நமது கலாசாரத்தில் எவ்வளவோ சடங்குகள் இருக்கின்றன. எந்தச் சடங்கு அர்த்தமுள்ளது, எந்தச் சடங்கு மூட நம்பிக்கை என்று எப்படிக் கண்டுகொள்வது? என்பதை பார்க்கலாம்.
    சத்குரு: ஒழுங்காக நடத்தப்படவிட்டால் எல்லா சடங்குகளுமே மூடநம்பிக்கையில்தான் முடியும். ஆனால், இதே சடங்குகள் ஒழுங்காக நடத்தப்பட்டால், மிகச் சிறந்த பலன்களைத் தருவதாக இருக்கும். நம்முடைய அடிப்படை இலட்சியமே எல்லோருக்கும் தியானத் தன்மையைக் கொண்டு வருவதுதான்.

    தியானத் தன்மையை ஒருவர் தன்னுள் கொண்டு வருவதற்கு ஆரம்பப் படிகள் எடுத்தாக வேண்டும். ஆனால், தியானத்திற்கான ஆரம்பப் படிகளை எடுக்க திரளான மக்களைத் தயார்ப்படுத்துவது என்பது மிகவும் கடினமான வேலை. பொதுவாக அப்படி எதிர்பார்க்க முடியாது. ஒரு தனிப்பட்ட மனிதருக்குத் தியானத் தன்மையைக் கொண்டு வருவது எளிது. ஆனால், ஒரு கூட்டத்திற்குத் தியானத் தன்மையைக் கொண்டுவருவது கடினம்.

    ஒரு சடங்கில் யார் வேண்டுமானாலும், திரளான மக்கள் கூட ஒரே நேரத்தில் கலந்து கொள்ளமுடியும். அதில் பங்கேற்க யாருக்கும் எந்த ஆரம்பப் படிகளும் தேவையில்லை. சடங்கின் அழகே அதுதான்.

    சடங்கில் பங்கேற்க யாரும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்காக வேறு யாரோ ஒருவர் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார். ஆனால், சடங்கில் ஒரு அபாயம் என்னவென்றால், சடங்கு நடத்துபவர் நாளடைவில் ஊழல் செய்பவராக மாறிவிட முடியும். எனவே, நாம் இந்த வி‌ஷயத்தில் பல எச்சரிக்கைகள் எடுத்திருக்கிறோம். இங்கு நடத்தப்படும் சடங்குகளில் மிக நீண்ட காலத்திற்கு ஏதும் ஊழல் நடந்துவிடாதபடி மிகவும் நாணயமும், பக்தியும் கொண்ட மக்களை இதற்காக நாம் உறுதி செய்திருக்கிறோம்.

    ஊழல் ஏற்படாதபடி உறுதி செய்துவிட்டால், எப்படிச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரிந்துசெய்தால், பிறகு சடங்கு என்பது ஒரு பிரமாதமான வி‌ஷயமாக இருக்கும். இது விஞ்ஞான ரீதியானது, இதில் மூடநம்பிக்கை ஏதுமில்லை. ஆன்மீகம் என்னவென்றால் சிறிதும் தெரியாத, அறியாமையில் இருப்பவர்கள்கூட, சடங்குகளில் பங்கேற்கும்போது, அதற்குத் தகுந்த பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கிறது. எனவே, ஒரு திரளான கூட்டத்திற்கு ஆன்மீகத்தின் நன்மைகளைத் தருவதற்கு சடங்கு சரியான வழி.
    Next Story
    ×