search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா 25-ந்தேதி தொடங்குகிறது
    X

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா 25-ந்தேதி தொடங்குகிறது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் உள்ள திருவிழாக்கள் நான்காகும். அவை ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா போன்றவை ஆகும்.

    இதில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்கி அடுத்த(ஆகஸ்டு) மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் 25-ந் தேதி அன்று காலை 10.35 மணியில் இருந்து 10.59 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்படுகிறது.



    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூரம் விழா 26-ந்தேதி அன்று மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் ஏற்றி இறக்கும் வைபவம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளையும் ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். 31-ந்தேதி ஏழாம் நாள் இரவு வீதி உலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ, மீனாட்சி அம்மனுக்கு தங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் போன்ற சேவைகள் பதிவு செய்து நடத்திட இயலாது என்று கோவில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×