search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தன்வந்திரி பீடத்தில் சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம்: ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது
    X

    தன்வந்திரி பீடத்தில் சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம்: ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது

    தன்வந்திரி பீடத்தில் வருகிற 23.07.2017 முதல் 30.07.2017 வரை உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் நடக்கிறது.
    தன்வந்திரி பீடத்தில் வருகிற 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் நடக்கிறது.

    உலக நன்மைக்காக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நிகழும் ஆடி மாத அமாவாசையில் இருந்து வளர்பிறை அஷ்டமி வரை எட்டு நாட்கள் அஷ்ட ஐஸ்வர்யம் பெறுவதற்கு சஹஸ்ர சண்டி யாகம் முப்பத்து முக்கோடி தேவதா ஆஹ்வான பூஜை ஹோமங்கள் அனைத்து ஜீவராசிகளின் க்ஷேமத்தை குறிக்கோளாக கொண்டு நடைபெறுகிறது.

    இந்த யாகத்தை ப்ரம்மஸ்ரீ. M.ராமகிருஷ்ண சர்மா, ஸ்ரீவித்யா உபாசகர், ஸ்ரீபுரம், வேலூர், அவர்கள் தலைமையில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனே, இராமேஸ்வரம், திருச்செந்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீவித்யா உபாசகர்களால் நடைபெறவுள்ளது.

    நிகழ்ச்சி நிழல் :

    23.07.2017 ஞாயிறு காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம் புண்ணியாகவாசனம், ரக்ஷா பந்தனம், நாந்திச்ரார்த்தம், வாஞ்சாகல்ப கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், மஹா லக்ஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், சுதர்சன யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.

    23.07.2017 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சதுஷ்ஷஷ்டி யோகினி பைரவர் பலி பூஜைகள், 7.00 மணிக்கு பஞ்ச சூக்த பாராயணம், மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    24.07.2017 திங்கள் கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, ருத்ர ஜபம், ஏகாதச ருத்ர ஹோமம், வசோத்வாரா ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, மரகதேஸ்வரருக்கு அபிஷேகம், பிரசாத விநியோகம்.

    24.07.2017 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு லலிதா சகஸ்ர நாம பாராயணம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்), மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    25.07.2017 செவ்வாய்க்கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், சுப்ரமண்ய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் மற்றும் அர்ச்சனை, பூர்ணாஹுதி, இடும்பன் பூஜை, மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.

    25.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு துர்காஷ்டகம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்) மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    26.07.2017 புதன் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, யாகசாலை ப்ரவேசம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், எஜமான சங்கல்பம், ரித்விக் வரணம், கலச பிரதிஷ்டை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், திதிநித்யா மூல மந்த்ர விசேஷ ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர்பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.

    26.07.2017 புதன் கிழமை மாலை 6.00 மணிக்கு தேவி மஹாத்மியம் சப்தசதி பாராயணம், ஸஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    27.07.2017 வியாழக் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ வராஹி மூலமந்த்ர விசேஷ ஹோமம், ராகு கேது பெயர்ச்சி ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர் பூஜை, பூர்ணாஹுதி, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    27.07.2017 வியாழக் கிழமை மாலை 6.00 மணிக்கு தேவிமஹாத்மியம் பாராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம் பிரசாத விநியோகம்.

    28.07.2017 வெள்ளி கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ சோடஷ மஹாலஷ்மி யாகம், ஸ்ரீசூக்த ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை கன்னியா பூஜை, வடுகபைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.

    28.07.2017 வெள்ளி கிழமை மாலை 6.00 மணிக்கு, தேவி மஹாத்மியம் பாராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் குபேர லக்ஷ்மி யாகம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    29.07.2017 சனிக் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், நவ துர்கா ஹோமம், சந்தான பரமேஸ்வரி யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, வடுகபைரவர் பூஜை,  கன்னியாபூஜை, வசுவத்தார ஹோமம், மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.

    29.07.2017 சனிக் கிழமை மாலை தேவி மஹாத்மியம் பராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, சதுர்வேத உபசாரம், மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.

    30.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், தசமஹாவித்யா ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுக பைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.

    30.07.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை தேவி மஹாத்மியம் பராயணம் சண்டி ஹோமம் பாவன உபநிஷத் உபசாரம், மஹா பூர்ணாஹுதி, வசோத்த்வாரா ஹோமம், மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், கலச புறப்பாடு, மஹா அபிஷேகம், விசேஷ ஆராதனை, ரித்விக் சம்பாவணை, அக்ஷத ஆசீர்வாதம், மஹா பிரசாதம் வழங்குதல்.

    எல்லாவிதமான நன்மைகளும் தேவியின் வாக்கின்படி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எல்லோரும் இந்த யாகத்தில்  கலந்துகொண்டு சண்டிகா தேவியின் அருளை பெறும்படி விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×