search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பண்ருட்டி காமன்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பண்ருட்டி காமன்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பண்ருட்டி காமன் கோவில் கும்பாபிஷேகம்

    பண்ருட்டி பொன்னுசாமி தெருவில் உள்ள காமன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பண்ருட்டி பொன்னுசாமி தெருவில் காமன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கோவிலில் விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர் முதல் கால யாக பூஜை நடந்தது.

    இதையடுத்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசை, இரண்டாம் கால யாக பூஜை, நாடிசந்தானம், பூர்ணாகுதி, யாத்ரா தானம், மகா தீபாராதனை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. இதன் பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அரிசி மண்டி ராஜேந்திரன், நகைக்கடை அதிபர் ரங்கநாதன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சீனுவாசன், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்ததி, ரோட்டரி சங்க துணை தலைவர் ரகு மற்றும் சம்பத்லால் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×