search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.
    X
    கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    குள்ளஞ்சாவடி அருகே புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குள்ளஞ்சாவடி அருகே கருமாச்சிபாளையம் கிராமத்தில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 3-ந்தேதி கோவிலில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து 4-ந்தேதி கோபூஜை, பூர்ணாகுதி நடந்தது. பின்னர் மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

    கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 10.15 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஓட்டல் ஆற்காடு உட்லண்ட்ஸ் மற்றும் அபிராமி ரெஸ்ட்டாரண்ட் ஸ்ரீராம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை முத்துகிருஷ்ணன், ஞானசந்திரன், கோபிகாந்தன் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×