search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவபெருமான் ஏன் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொள்கிறார் தெரியுமா?
    X

    சிவபெருமான் ஏன் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொள்கிறார் தெரியுமா?

    சிவபெருமான் மற்ற கடவுள்களைப் போல் ஆரம்பர அலங்காரம் ஏதும் இல்லாமல், எப்போதுமே எளிமையான தோற்றத்தில் காணப்படுவார். இது குறித்து விரிவாகக் காண்போம்.
    மும்மூர்த்திகளான பிரம்மா-விஷ்ணு-மகேஸ்வரன் ஆகியவர்களில் ஒருவரான சிவபெருமான் உச்சக்கட்ட அழிக்கும் கடவுள். இவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு என இல்லாததால், இவருடைய பக்தர்கள் இவரை முடிவற்ற மகாதேவா என அழைப்பார்கள். சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன.

    சிவபெருமான் மற்ற கடவுள்களைப் போல் ஆரம்பர அலங்காரம் ஏதும் இல்லாமல், எப்போதுமே எளிமையான தோற்றத்தில் காணப்படுவார். குறிப்பாக இவரது உடை மற்றும் அணிகலன்கள் முற்றிலும் வேறுபட்டவையாக காணப்படும். இதுக் குறித்து விரிவாகக் காண்போம்.

    கைலாச மலையில், ஆதி சக்தியின் அவதாரமும் தன் மனைவியுமான பார்வதி தேவியுடன் ஒரு யோக துறவியாக சிவபெருமான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என இந்து புராணங்கள் கூறுகின்றன.

    அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள மற்ற கடவுள்களை போல் அல்லாமல், வாழ்வாதாரத்திற்கு தேவையான குறைந்தபட்ச தேவைபாடுகளுடன் சிவபெருமான் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

    தன் இடுப்பைச் சுற்றி இடது தோள்பட்டை வரை புலித்தோல் ஆடை, கழுத்தை சுற்றி பாம்பு, ஜடாமுனியில் அரை நிலவு, திரிசூலம் மற்றும் உடல் முழுவதும் பூசப்பட்ட சாம்பல் - இதுவே அவருடைய அடையாளம்.



    அவர் உடலில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் விடாமுயற்சி, அமைதி, பயம், நேரம் மற்றும் காமம் ஆகியவற்றை வெல்வதைக் குறிக்கும். அதே போல் அவர் உடல் முழுவதும் பூசிக்கொண்டுள்ள சாம்பல் முதன்மையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது இறந்தவர்களுடன் ஆத்ம ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளது.

    இறந்த பிறகு எஞ்சியிருப்பது சாம்பல் என்ற இந்த புனிதமான விபூதி தூய்மையைக் குறிக்கும். இந்த சாம்பல் உணர்ச்சிகள், காமம், பேராசை மற்றும் பயம் போன்ற பூலோக தொடர்புகளுக்கு அப்பாற்பட்டது. சிவபெருமான் தன் உடல் முழுவதும் இந்த சாம்பலை பூசிக்கொள்வது, இறந்தவர்களின் தூய்மையைப் பறைசாற்றும்.

    புராணங்களின் படி, பெரும்பாலான தன் நேரத்தை இடுகாட்டில் பிணங்களுடன் செலவழிக்கிறார். அதற்கு காரணம், இவ்வழியில் தான் அழித்தவர்களின் கடுந்துயரைப் போக்கலாம் என அவர் நம்புவதால்.

    மனிதர்களின் பிறப்பு மற்றும் வாழ்விற்கு பொறுப்பான பிரம்மா மற்றும் விஷ்ணுவை போல் அல்லாமல், அவர்களை அழிக்கும் கடவுளாக உள்ளார் சிவன். அதனால் அவர்களை எப்போதுமே தன்னில் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள இறந்தவர்களின் சாம்பலை தன் உடலில் பூசிக்கொள்கிறார்.

    அப்போது விஷ்ணு பகவான் சதியின் பிணத்தை தொட்டவுடன் அவர் சாம்பலாகி போனார். தன் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத சிவபெருமான், அவர் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உடல் முழுவதும் தன் மனைவியின் சாம்பலை பூசிக்கொண்டார்.
    Next Story
    ×