search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்தி விநாயகர் - உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    சித்தி விநாயகர் - உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    நாகர்கோவில் கோட்டாரில் வீரசைவ சமுதாய சித்தி விநாயகர்-உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டாரில் வீரசைவ சமுதாய சித்தி விநாயகர்-உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது.

    காலை 10.30 மணிக்கு யானைகள், குதிரைகள் புடைசூழ மேள தாளங்கள் முழங்க கரியமாணிக்கபுரம் முப்பிடாரி அம்மன் கோவில் திருச்சுனையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) 2-ம் கால யாகபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், மாலை 6.30 மணிக்கு ஆசாரிய விசேஷ சந்தி, 7 மணிக்கு 3-ம் காலயாக பூஜையும் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் யாகசாலை பூஜை முடிவடைந்த பிறகு சரியாக 9.25 மணிக்கு ராஜகோபுரம், விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து சித்தி விநாயகர், உஜ்ஜைனி மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி தெய்வங்களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகமும் நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் மாரிமுத்து என்ற சங்கர், செயலாளர் நாகராஜன், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, சொரிமுத்து, வேலுப்பிள்ளை, அய்யப்பன், பாண்டுரங்கன், தாணுமூர்த்தி, கிருஷ்ணன், கோபாலன், முருகன், சண்முக சுந்தரம், சிதம்பர தாணு என்ற முருகன், அசோகன், நீலகண்டன், சுடலையாண்டி மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள், வீர சைவ சமுதாய மக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×