search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை அய்யப்பன் கோவில் ஆராட்டு திருவிழா
    X

    சபரிமலை அய்யப்பன் கோவில் ஆராட்டு திருவிழா

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை விழா கடந்த 25-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆராட்டு திருவிழா இன்று தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது.
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை விழா கடந்த 25-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆராட்டு திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது.



    இன்று காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு கொடியை ஏற்றி வைத்து, ஆராட்டு திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு நடைதிறப்பு, 6.30 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு உஷ பூஜை, 11 மணிக்கு உற்சவ பலி, மதியம் 1 மணிக்கு உற்சவ பலி தரிசனம், 2 மணிக்கு உச்ச பூஜையை தொடர்ந்து நடை அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.

    மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு படி பூஜை, 9.30 மணிக்கு அத்தாளபூஜை, ஸ்ரீ பூத பலி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது. மறுநாள் (7-ந்தேதி) பகல் 11 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியாக பம்பை நதிக்கரையில் சுவாமி அய்யப்பனுக்கு ஆராட்டு வைபவம் நடைபெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு இயக்க கேரள அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது. திருவனந்தபுரம், பத்தனம்திட்டை, கொல்லம், கோட்டயம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய நகரங்களில் இருந்து தொடர் பஸ் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

    பம்பை மற்றும் சன்னிதானத்தில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருக்கிறது. பாதுகாப்புக்காக சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    Next Story
    ×