search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடலூர் சோலைவாழியம்மன், அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 26-ந்தேதி நடக்கிறது
    X

    கடலூர் சோலைவாழியம்மன், அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 26-ந்தேதி நடக்கிறது

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனி சோலைவாழியம்மன் கோவில், வண்டிப்பாளையம் சாலை ராஜயோக அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியுர் மார்க்கெட் காலனியில் சோலைவாழியம்மன் கோவில் உள்ளது. அதேபோல் வண்டிப்பாளையம் சாலை ஸ்டேட் பாங்க் காலனியின் பின்புறம் ராஜயோக அய்யனார் சாமிகோவில் உள்ளது. இந்த 2 கோவில்களிலும் கும்பாபிஷேகம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு நாளை(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம், கணபதி மற்றும் லட்சுமிபூஜை, கோபூஜை, தனபூஜை, பூர்ணாகுதி தீபாராதனையும், மாலை 5 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி பூஜையும் நடக்கிறது.

    நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 5 மணிக்கு நவக்கிரக பூஜை, ஹோமம், மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை நடக்கிறது. இதைத் தொடர்ந்து 25-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிமுதல் விக்னேஷ்வரபூஜை, யாக மண்டபம் பூஜை உள்ளிட்ட பூஜைகளும், அதனை தொடர்ந்து 2-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. மாலை 5.30 மணி முதல் யாக மண்டல பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் 3-வது கால யாக பூஜை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் அய்யனார்கோவில் கும்பாபிஷேகமும், காலை 9.45 மணிக்கு மேல் காலை 10.30 மணிக்குள் சோலைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 2 கோவில்களிலும் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர், நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×