search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பஞ்சமுக மகாமங்கள பிரத்யங்கிராதேவிக்கு யாகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    பஞ்சமுக மகாமங்கள பிரத்யங்கிராதேவிக்கு யாகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்சமுக மகாமங்கள பிரத்யங்கிராதேவி சன்னதியில் நிகும்பலா யாகம் நடைபெற்றது.
    கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சிதம்பரேஸ்வரர் கோவிலில் பஞ்சமுக மகாமங்கள பிரத்யங்கிராதேவி சன்னதி உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று நிகும்பலா மகாயாகம் நடைபெறுவது வழக்கம். அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் நிகும்பலா யாகம் நடைபெற்றது.

    காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மூட்டை, மூட்டையாக மிளகாய் வற்றல் யாக குண்டத்தில் போடப்பட்டது. மேலும் பட்டுப்புடவைகள், பழங்கள், புஷ்பங்கள் என பல பொருட்கள் யாககுண்டத்தில் போடப்பட்டு யாகம் நடைபெற்றது. முன்னதாக 1008 தாமரை மலர்கள் யாக குண்டத்தில் உலக நன்மைக்காக போடப்பட்டது.

    யாகசாலை பூஜைகளை கோவில் அர்ச்சகர் டி. கணேஷ்குமார் சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாகத்துக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×