search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்பம் தரும் இரட்டை ஆஞ்சநேயர்
    X

    இன்பம் தரும் இரட்டை ஆஞ்சநேயர்

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள இரட்டை ஆஞ்சநேயர் கோவில் ஆஞ்சநேயர்களுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போல இன்னல்கள் தீரும்.
    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது மேலப்பாதி கிராமம். இங்கு மிகவும் பிரசித்திப் பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    முன் காலத்தில் செம்பனார் கோவிலுக்கும், மேலப்பாதிக்கும் இடையே ஓடும் காவிரி ஆற்றில் இறங்கிச் செல்லும் நிலை இருந்தது. எனவே அந்தப் பகுதி மக்கள் ஆற்றில் மூங்கில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த மக்களுக்கு இரண்டு மனித குரங்குகள் உதவி செய்தன. ஒரு நாள் பாலம் கட்டிய சோர்வில் இரண்டு குரங்குகளும் அருகில் இருந்த இலுப்பைக் காட்டு திடலில் ஓய்வு எடுத்தன.

    சிறிது நேரத்தில் அவை இரண்டும் அதே இடத்தில் ஐக்கியமாகி விட்டதாக இந்தக் கோவில் தல புராணம் தெரிவிக்கிறது. எனவே அந்த மக்கள், இரண்டு குரங்குகளுக்கும் ஆலயம் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கிவிட்டனர். இங்குள்ள ஆஞ்சநேயர்களுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போல இன்னல்கள் தீரும். சனி பகவானின் தாக்கம் குறையும். எடுத்த காரியங்கள் வெற்றி யாகும்.
    Next Story
    ×