search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பகோணம் உச்சினி மாகாளியம்மன் கோவில் விழா
    X

    கும்பகோணம் உச்சினி மாகாளியம்மன் கோவில் விழா

    கும்பகோணம் துக்காம் பாளையத்தெருவில் உள்ள உச்சினி மாகாளியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    கும்பகோணம் துக்காம் பாளையத்தெருவில் உச்சினி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோடை அபிஷேக விழா (மழை பெய்யவேண்டி நடை பெறும் விழா) தொடங்கியது. விழாவையொட்டி காளியம் மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நேற்று காவிரி பகவத் படித்துறையிலிருந்து பக்தர்கள் கரகம், அலகுகாவடி, பால் குடம் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    அதைத் தொடர்ந்து கஞ்சிவார்த்தலும், வீரனுக்கு பொங்கல் வைத்து படையலும் நடைபெற்றது. பின்னர் அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட் கிழமை) அம்மன் சூரிய தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    இதேபோல சுவாமிமலை ராஜவீதி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சர்வசக்தி மாரியம்மனுக்கு கோடை அபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் தங்க சிம்ம வாகனத்தில் புஷ்ப அலங் காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
    Next Story
    ×