search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.
    X
    மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.

    மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

    செவலூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    மணப்பாறையை அடுத்த செவலூரில் சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த புதன்கிழமை இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் மண்டகப்படி நிகழ்ச்சியும், சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குட விழா நேற்று நடைபெற்றது. ஊரின் கடைசிப் பகுதியில் உள்ள ஆலமரம் அருகே இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. இதில் தாரை, தப்பட்டை முழங்க ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பால்குடம் சுமந்து முன்னே செல்ல, அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். செவலூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும், அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    இதேபோல் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் கரும்பில் தொட்டில் கட்டி தங்களின் குழந்தைகளை சுமந்து வந்தனர். திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) மாலை காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆலமரம் அருகே இருந்து ஏராளமானோர் காவடி எடுத்து கோவிலுக்கு வருவார்கள்.

    நாளை(செவ்வாய்க்கிழமை) காலை முதல் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலையில் படுகளம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், ஊர் முக்கியஸ்தர்களும், கிராம மக்களும் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×