search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேதநாராயணபெருமாள் கோவில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த காட்சி.
    X
    வேதநாராயணபெருமாள் கோவில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த காட்சி.

    வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி தேரோட்டம்

    தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள் கோவிலில் வைகாசி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.இதில் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷத்துடன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் சிறப்பு வாய்ந்த வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகித் தாயார் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள வைணவத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான இங்கு பெருமாள் நான்கு வேதங்களை தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார்.

    இதனால் தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித்தருகிறார். மேலும் பிரகலாதஷேத்திரம், அரையருக்கு மோட்சம் தந்த ஸ்தலம் என பல சிறப்புகளைப்பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வைகாசித்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.


    தேரில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வேதநாராயணபெருமாள்.

    இந்த ஆண்டு வைகாசித்திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வேதநாராயணப்பெருமாள் துவஜா ரோஹனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருடவாகனம், ஹனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை நம்பிரான் ஆகிய வாகனங்களில் திருவீதியுலா வந்தார்.

    15-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. வேதநாராயணப்பெருமாள் உப நாச்சியார்கள் பூமாதேவி ஸ்ரீதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற கோஷங் களிடையே திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் நிலையை வந்தடைந்ததும் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    Next Story
    ×