search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமை மிகுந்த பொன் நாள் அட்சய திருதியை
    X

    பெருமை மிகுந்த பொன் நாள் அட்சய திருதியை

    அட்சய திருதியை தினமான இன்று பல்வேறு சிறப்பு வாய்ந்த முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. இந்த நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    தர்மர், கவுரவர்களுடன் நடந்த சதுரங்க ஆட்டத்தில் நாட்டையும், தன்னையும், தன் தம்பிகளையும் இழந்ததுடன், மனைவி பாஞ்சாலியையும் சூதாடி இழந்தார். இதையடுத்து துரியோதனன், பாஞ்சாலியை சூதாட்டம் நடந்த இடத்திற்கு இழுத்து வந்து துகிலுரிக்க உத்தரவிட்டான். அந்த அவையில் பீஷ்மர், துரோணர் என பல அறிஞர்கள் இருந்தும், அந்த உத்தரவை தடுக்க யாருக்கும் தைரியமில்லை.

    துச்சாதனன், பாஞ்சாலியின் சேலையை பிடித்து இழுக்க, அவள் கிருஷ்ணனை நினைத்து மன முருக வேண்டினாள். இதையடுத்து கிருஷ்ணர் ‘அட்சய’ என்றபடி கையை காட்ட, பாஞ்சாலியின் சேலை வளர்ந்து கொண்டே சென்றது. துச்சாதனன், சேலையை இழுத்து இழுத்து அது முடிவுறாத நிலையில் மயங்கி கீழே விழுந்து விட்டான்.



    கிருஷ்ணர், பாஞ்சாலியின் மானம் காத்த அன்றைய தினம் ‘அட்சய திருதியை’ நாள் ஆகும். இதே போல் தனது பால்ய நண்பர் குசேலனுக்கும், கிருஷ்ணர் அருள்புரிந்தார். வறுமையில் வாடிய குசேலர், கிருஷ்ணனை சந்திப்பதற்காக வந்திருந்தார். நண்பனைப் பார்க்கும் போது வெறும் கையுடன் செல்லக்கூடாது என்பதற்காக, பக்கத்து வீட்டில் இருந்து கொஞ்சம் அவல் கடன் வாங்கிக் கொண்டு வந்திருந்தார்.

    குசேலரை பார்த்ததும், ஓடோடி வந்து அனைத்துக் கொண்ட கிருஷ்ணர், அவர் கொண்டு வந்த அவலை ‘அட்சய’ என்று உச்சரித்து வாயில் போட்டார். மறு வினாடியே குசேலரின் வீட்டில் செல்வம் குவிந்தது. குசேலர் செல்வம் பெற்ற திருநாளும் ‘அட்சய திருதியை’ தான்.
    Next Story
    ×