search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திருவையாறில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது.

    விழாவில் 4-ந் தேதி மகேஸ்வர பூஜையும், 8-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. அதை தொடர்ந்து 11-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான திருவிழா நடக்கிறது. இதில் ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகை அம்மனுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையடுத்து 12-ந் தேதி திருவையாறு தேரடியில் சாமிக்கு, பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×