search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயிலாடி அருகே தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது
    X

    மயிலாடி அருகே தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

    மயிலாடி அருகே லட்சுமிபுரம் தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது.
    மயிலாடி அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை விழா நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான நேற்று வாஸ்துபலி, வாஸ்து ஹோமம், ஸ்தல சுத்தி போன்றவை நடந்தன. இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், நவகிரக ஹோமம், துர்க்கா ஹோமம், விக்ரக சுத்தி ஆகியவையும், மாலை 5 மணிக்கு சுதர்சன ஹோமம், சுதர்சனபூஜை, லட்சுமி பூஜை, விக்ரக பிரதிஷ்டை போன்றவையும் நடைபெறுகிறது.

    விழாவின் இறுதி நாளான நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 7 மணிக்கு கலசபூஜை, 9 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து, பகல் 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் பாபு, பொருளாளர் விக்னேஸ்வரன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×