search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கொடியேற்றம்

    கூடலூர் அருகே கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தமிழக- கேரள எல்லையில் தேனி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் பளியன்குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் மலையின் மேலே மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இதனை மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழக மன்னர்களால் இங்கு கண்ணகி கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் பளியன்குடியிருப்பு பகுதி வழியாக வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும். இந்த பாதையை பயன்படுத்த திருவிழா நாளில் மட்டும் தமிழக வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள்.

    இவையில்லாமல் கேரள மாநிலம் குமுளியில் இருந்து மலைப்பாதை வழியாக ஜீப் போன்ற வாகனங்களில் சென்று வரலாம். ஆனால் இந்த மலைப்பாதையையும் திருவிழா நடைபெறும் போது ஒரு நாள் மட்டும் கேரள வனத்துறையினர் திறந்துவிடுவார்கள். மற்ற நேரங்களில் இந்த பாதை மூடப்பட்டு இருக்கும்.



    ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று கண்ணகி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த விழா ஒரு வாரம் நடைபெற்று வந்தது. தற்போது ஒரு நாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

    விழாவையொட்டி பளியன்குடியிருப்பில் நேற்று காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. பச்சை மூங்கிலில் கண்ணகி உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. முன்னதாக கொடிமரத்துக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் கூடலூர்- கம்பம் கண்ணகி கோவில் அறக்கட்டளை குழுவினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா நடைபெறுவதையொட்டி தமிழக வனப்பகுதியில் பளியன்குடியிருப்பில் இருந்து கண்ணகி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×