search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா 30-ந் தேதி தொடங்குகிறது
    X

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா 30-ந் தேதி தொடங்குகிறது

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா வருகிற 30-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மறுநாள் 1-ந்தேதி சூரிய, சந்திர மண்டல காட்சிகளும், 2-ந்தேதி பூதவாகன, அதிகார நந்தி, கிளி வாகனங்களில் சாமி எழுந்தருளலும் நடக்கிறது.



    வருகிற 3-ந்தேதி புஷ்ப வாகன, கைலாச வாகனங்களில் சாமி எழுந்தருளலும் நடக்கிறது. 4-ந்தேதி இரவு 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 63 நாயன்மார்கள் எழுந்தருளலும் நடக்கிறது. 5-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், இதைதொடர்ந்து கற்பக விருட்சம் வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.

    6-ந்தேதி காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளும், அவினாசி லிங்கேஸ்வரர் மற்றும் கருணாம்பிகை அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளுதல் நடக்கிறது. 7-ந்தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படு கிறது. 8-ந்தேதி அம்மன் தேரோட்டமும், மாலை வண்டிதாரை, இரவு பரிவேட்டையும் நடக்கிறது.

    9-ந்தேதி மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவமும், 10-ந் தேதி மகாதரிசனம் நடக்கிறது. 11-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
    Next Story
    ×