search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேலம் பெருமாள் கோவில்களில் ராமானுஜர் ஜெயந்தி விழா
    X

    சேலம் பெருமாள் கோவில்களில் ராமானுஜர் ஜெயந்தி விழா

    சேலம் பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் ராமானுஜரின் 1000-ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்து வருகிறது.
    சேலம் பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் ராமானுஜரின் 1000-ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு திருவாராதனமும் நடக்கிறது. இன்று(புதன்கிழமை) தியாகராஜன் புல்லாங்குழல் இன்னிசையும், நாளை(வியாழக்கிழமை) கோட்டை உமாமகேஸ்வரி வீணை கச்சேரியும், 28-ந் தேதி கோலாட்ட நிகழ்ச்சியும், 29-ந் தேதி லட்சுமண ராமானுஜதாசர் உபன்யாசமும், 30-ந் தேதி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், அடுத்த மாதம்(மே) 1-ந் தேதி புதுச்சேரி ஜோசப் உபன்யாசமும், 2-ந் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதேபோல சேலம் அம்மாபேட்டை மெயின் ரோட்டில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் 28-ம் ஆண்டு பிரமோத்சவமும், ராமானுஜரின் 1000-ம் ஆண்டு விழாவும் நடந்து வருகிறது. விழாவையொட்டி இன்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு பெருமாள் இந்திர விமானத்தில் புறப்பாடும், இரவு 8 மணிக்கு கஜ வாகனத்தில் சாமி திருவீதி உலாவும், நாளை(வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு பெருமாள் திருப்பல்லக்கில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பாடும், நடக்கிறது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி வரை தினமும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×