search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது
    X

    நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக லட்சுமி நாராயண பெருமாள் கோவில்சித்திரை திருவிழா வருகிற 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நாராயண பெருமாளின் மடியில் லட்சுமிதேவி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதியும், சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதியும் இந்த கோவிலில் அமைந்துள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, சித்திரை திருவிழா போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து லட்சுமி-நாராயண பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது.



    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது, தினசரி லட்சுமி-நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெறும். சிம்மம், சேஷம், மரச்சப்பரம், அனுமன், தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கும். விழாவின் 7-ம் திருநாளில், மாலை 6 மணிக்கு மேல் லட்சுமி-நாராயண பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    9-ம் திருநாளன்று தேரோட்ட நிகழ்ச்சியும், திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினசரி மாலை 6 மணி முதல் பாசுரங்கள் சேவித்தல், பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டிய, நாடகங்கள் போன்ற பல்வேறு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×