search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள் கோவிலில் ராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா
    X

    ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள் கோவிலில் ராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா

    ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள் கோவிலில் ராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா 21-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்ய கார சுவாமி கோவிலில் ராமானுஜர் தானு கந்த திருமேனியாக அருள்பாலித்து வருகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் 9 நாட்களுக்கு முன்பாக தொடங்கப்படும் சித்திரை பெருவிழா, அவதார உற்சவமாக நடைபெற்று வருகிறது.

    ஸ்ரீராமானுஜரின் 1000-வது ஆண்டு அவதார உற்சவம் வருகிற 21-ந் தேதி தொடங்கி மே 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஸ்ரீராமானுஜர் அவதார உற்சவத்தில் 22-ந் தேதி தங்க பல்லக்கில் ராமானு ஜர் எழுந்தருளி ஊர்வலமாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 23-ந் தேதி யாளி வாகனம், 25-ந் தேதி சிம்ம வாகனம், 28-ந் தேதி சூரியபிரணம் வாகனமும் நடைபெறும்.

    வுருகிற 30-ந் தேதி ராமானுஜர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, சின்ன கடை தெரு வழியாக பக்தர்கள் வடம் இழுத்து தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

    இதைத் தொடர்ந்து மே 1-ந் தேதி ஸ்ரீராமானுஜர் அவததரித்த திருவாதிரை நட்சத்திரத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, சாத்துமுறை, தங்கப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. பக்தர்கள் வசதிக்காக கோவிலை சுற்றி ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், கழிவறைகள், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் செய்து வருகிறது.

    இதற்கிடையே ஸ்ரீராமனு ஜர் 1000 வது திரு அவதார விழா நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், அறநிலையத் துறை மற்றும் பேரூராட்சி மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தீர்த்தவாரி நடைபெறும் குளத்தின் அருகில் தீயணைப்பு துறையினர் மற்றும் நீச்சல் தெரிந்த வீரர்கள் பணியில் இருக்க வேண்டும். சுகாதாரதுறை மூலம் 108 ஆம்புலன்சுகள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவுரி ராஜன், சப்கலெக்டர் அருண் தம்புராஜ், டிஎஸ்பி சிலம்பரசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×