என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க, வெள்ளி, தாமிர டாலர்கள் விற்பனை
Byமாலை மலர்19 April 2017 4:45 AM GMT (Updated: 19 April 2017 4:45 AM GMT)
அட்சய திருதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க, வெள்ளி, தாமிர டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல ஆண்டுகளாக தங்க, வெள்ளி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஏழை எளிய பக்தர்களின் நலன் கருதி தாமிர டாலர்களும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
டாலரின் ஒரு பக்கத்தில் ஏழுமலையான் உருவமும், மற்றொரு பக்கத்தில் பத்மாவதி தாயார் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. 2, 5, 10 கிராம் எடையில் தயார் செய்யப்பட்ட தங்க, வெள்ளி டாலர்களும், 5 மற்றும் 10 கிராம் எடையில் தயார் செய்யப்பட்ட தாமிர டாலர்களும் தற்போது ஆந்திரா வங்கி மூலமாக பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவிலில் விற்பனை செய்து வந்த டாலர்கள், 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லட்டு கவுண்ட்டர் பகுதிக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் டாலர்கள் விற்பனை செய்வது பக்தர்கள் யாருக்கும் சரிவர தெரியாமல் இருந்து வந்ததால், விற்பனையும் மந்தமாக காணப்பட்டது. இதனால் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்களும் வந்தன.
இதையடுத்து லட்டு கவுண்ட்டர் பகுதியில் இருந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி ஏழுமலையான் கோவில் எதிரே மாற்றப்பட்டது. அங்கு, தற்போது டாலர்கள் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. தினமும் சாதாரண நாட்களில் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை விற்பனை நடக்கிறது. கோவிலில் சாதாரண விழாக்களின்போது ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை டாலர்கள் விற்பனையாகும்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த வைகுண்ட ஏகாதசி அன்று ஒரேநாளில் ரூ..13 லட்சத்துக்கு டாலர்கள் விற்பனை ஆகியது. மேலும் ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா, யுகாதி பண்டிகை ஆகிய நாட்களில் ரூ.20 லட்சத்துக்கு மேல் டாலர்கள் விற்பனை நடக்கும்.
இந்தநிலையில் அடுத்த வாரம் இறுதியில் அட்சய திருதியை வருவதால், டாலர்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனினும், 5 கிராம் எடையிலான தாமிர டாலர்கள் இருப்பு இல்லை. 10 கிராம் தங்க டாலர் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு தங்க, வெள்ளி, தாமிர டாலர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:- 10 கிராம் தங்க டாலர் ரூ.28 ஆயிரத்து 480, 5 கிராம் தங்க டாலர் ரூ.14 ஆயிரத்து 455, 2 கிராம் தங்க டாலர் ரூ.5 ஆயிரத்து 780 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் வெள்ளி டாலர் ரூ.575-க்கும், 5 கிராம் வெள்ளி டாலர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தாமிர டாலர் ரூ.20-க்கும், 5 கிராம் தாமிர டாலர் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story
×