search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்திரையின் பெருமைமிகு திருவிழாக்கள்
    X

    சித்திரையின் பெருமைமிகு திருவிழாக்கள்

    சித்திரை திருவிழா மாதம் என்று கூறும் அளவிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் விதவிதமான பெயர்களிலும் வெவ்வேறு விதமான விழா வடிவங்களில் கொண்டவாறு உள்ளன.

    சித்திரை மாத முழுவதும் சிறப்பு விழாக்கள் பல ஒவ்வொரு ஆலயங்களிலும் நடைபெறுகின்றன. சித்திரை திருவிழா மாதம் என்று கூறும் அளவிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் விதவிதமான பெயர்களிலும் வெவ்வேறு விதமான விழா வடிவங்களில் கொண்டவாறு உள்ளன.

    சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களை காண அந்தந்த ஊர்களிலும் ஏராளமான பொதுமக்களும், வெளிநாட்டினரும் அதிகளவு குவிகின்றனர். சித்திரையின் வெயில் தாண்டவத்தையும் தாண்டி இறைவனின் அருள் தாண்டவத்தையும் விழாகோல இறை உருவங்களையும் காண மக்கள் இணைகின்றனர். இத்துணை சிறப்பு சித்திரை திருவிழாக்கள்.

    மதுரை சித்திரை திருவிழா:

    மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவை காண ஏராளமான மக்கள் மதுரையில் கூடுவர். திருமலை நாயக்க மன்னரால் தொடங்கப்பட்ட சித்திரை திருவிழா இன்றளவும் அதன் சிறப்புகள் குறையாதவாறு நடைபெற்று வருகின்றன.

    மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், அடுத்து தேரோட்டம், அதனை பார்க்க கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு எழுந்தருள்வார். அதற்கான எதிர் சேவை நிகழ்வுகள், கள்ளழகர் வைகை ஆற்றில் மக்கள் வெள்ளத்தின் நடுவே இறங்குவது, தசாவதார அலங்கார தரிசனம், பூம்பல்லக்கு என கள்ளழகர் அழகர் மலை திரும்புதல், என திருவிழா நாட்கள் அனைத்தும் மகிழ்ச்சியும், ஆரவாரமும் நிறைந்திருக்கும்.

    அகத்தியருக்கு திருமண காட்சி அருளும் திருவிழா:

    அம்பாசமுத்திரம் அருகில் உள்ள பாபநாசம் கோவிலில் குடியிருக்கும் பாபநாசரும், பார்வதி தேவியும் அகஸ்தியருக்கு சித்திரை முதல் நாளன்று திருமண கோலத்தில் காட்சியளித்தனர். அதற்கான விழா வெகுவிமர்சையாக நடைபெறும். மேலும் சித்திரை விஷீ முதல் நாள் முதல் சூரிய கதிர்கள் பாபநாசபெருமான் மீது விழுந்து வழிபடும் நிகழ்வும் நடைபெறுகிறது. அத்துடன் சித்திரை விஷீ முதல் நாளன்று பாவங்களை போக்கும் பாபநாச தாமிரபரணி ஆற்றில் குளித்தால் சகல பாவமும் தீரும் என்பதால் அதற்கென ஏராளமான பக்தர்கள் வருவர். ஒரேநாளில் சித்திரை விஷீ அன்று கல்யாண உற்சவ திருவிழா, சூரிய கதிர் விழும் காட்சி, தாமிரபரணி நீராடல் அனைத்தும் நிகழ்வதால் பாபநாசம் மக்கள் வெள்ளத்தில் மிதப்பர்.


    ஸ்ரீரங்கம் மற்றும் தாயுமானவர் கோவிலில் சித்திரை திருவிழா:

    ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் விருப்பன்ன உடையார் 32 கிராமங்களை எழுதிக் கொடுத்ததை முன்னிட்டு சித்திரை உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    அதுபோல் ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச திருவிழா மற்றும் தேரோட்டமும் சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது.

    திருச்சி தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா பத்து நாட்கள் கொண்டதாக தேர்த்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    அவிநாசியப்பருக்கு பிரம்மோற்சவம்:

    அவிநாசியில் உள்ள அவிநாசியப்பருக்கு சித்திரை மாதத்தில் பதினொரு நாட்கள் காலையும், மாலையும் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறும். ஆதிகாலத்தில் பிரம்மதேவர் அவிநாசியப்பருக்கு பூஜை செய்து உற்சவம் நடத்தியதாக ஐதீகம். அவினாசி கோவிலில் தேர் தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். ஏழாம் நாள் நடைபெறும் இப்பெரிய தேரோட்ட திருவிழாவின்போது விநாயகர், சுப்ரமணியர், அம்மன், சண்டிகேஸ்வர், முருகநாதர், அரிவரதராஜபெருமாள் போன்ற அனைவரும் தனித்தனி தேர்களில் அணிவகுத்து வருவர். இதனை காணும்போது தேர்கள் ஓரும் வீதி என கூறுவோம்.
    Next Story
    ×