search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்லியாண்டியம்மன் கோவில் குண்டம் விழா: ஆண்கள் மட்டும் தீ மிதித்தனர்
    X

    செல்லியாண்டியம்மன் கோவில் குண்டம் விழா: ஆண்கள் மட்டும் தீ மிதித்தனர்

    அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ள செல்லியாண்டியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆண்கள் மட்டும் தீ மிதித்தனர்.
    அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று இரவு கோவிலில் கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து தினமும் பெண்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. ஆண் பக்தர்கள் மட்டும் தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள் பலர் தங்களது கைக்குழந்தைகளுடன் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அப்போது சுற்றிலும் நின்றுகொண்டு இருந்த பக்தர்கள் கரவோசை எழுப்பி குண்டம் இறங்கும் பக்தர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

    பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மேலும் பெண்கள் பலர் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்தனர். இதேபோல் பக்தர்கள் உடலில் அலகு குத்திக்கொண்டு கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். திருவிழாவையொட்டி செல்லியாண்டியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குண்டம் விழாவில் அந்தியூர், தவுட்டுப்பாளையம், பருவாச்சி, பவானி, சந்தியபாளையம், பிரம்மதேசம், செம்புளிச்சாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×