search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காற்றாடித்தட்டு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    காற்றாடித்தட்டு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    காற்றாடித்தட்டு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
    காற்றாடித்தட்டு ஊர் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை தொடங்கியது. இதனையொட்டி காலை 5 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, புண்யாவாசனம், சங்கல்பம், கணபதி ஹோமமும், 9 மணி முதல் 12 மணி வரை தீபாராதனை, கோ பூஜை, நவகிரக பூஜை ஹோமம், சுதர்சன ஹோமம், அன்னதானமும் நடந்தது.

    மதியம் 2.30 மணிக்கு அளத்தன்கரை தென்பாற்கடற்கரை பிள்ளையார்கோவில் அருகில் தீர்த்த குடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டது. தொடர்ந்து செண்டை மேளம் முழங்க யானை ஊர்வலத்துடன் வலம் வந்து அம்மன் சன்னதியை வந்தடைதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு முதல் கால யாக பூஜையும் நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலையில் 2-ம் கால யாகபூஜை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, 6.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜை, இரவு 11 மணிக்கு மூர்த்தி பிரதிஷ்டை நடக்கிறது.

    நாளை காலை 8 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், தொடர்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கொண்டு செல்லப்பட்டு, 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் முத்தாரம்மன் விமான கோபுர கலசம் மற்றும் பரிவார மூர்த்தி கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, அடுத்த மாதம் 14-ந் தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகக்குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×