search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் 5-ந்தேதி தொடங்குகிறது
    X

    வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் 5-ந்தேதி தொடங்குகிறது

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் வருகிற 5-ந்தேதி(புதன் கிழமை) முதல் தொடங்குகிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் வருகிற 5-ந்தேதி(புதன் கிழமை) முதல் தொடங்குகிறது. தொடர்ந்து 15-ந்தேதி வரையில் நடைபெறும் உற்சவத்தில் தினசரி காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 8 மணிக்கு சாமி புறப்பாடும் நடைபெற உள்ளது.

    11-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ந்தேதி காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், 15-ந்தேதி ராமர் பட்டாபிஷேக உற்சவமும் நடைபெற உள்ளது. உற்சவம் நடைபெறும் 11 நாட்களும் உற்சவர் ராமர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.



    ராமநவமி உற்சவத்தையொட்டி ராமாயண சொற்பொழிவும் கோவிலில் நடைபெற இருக்கிறது. இதில் 5-ந்தேதி ராமர் ஜனனம் என்கிற தலைப்பிலும், 6-ந்தேதி சீதா கல்யாணம், 7-ந்தேதி கைகேயி வரம், 8-ந்தேதி பாதுகா பட்டாபிஷேகம், 9-ந்தேதி சூர்ப்பனகை சூழ்ச்சி, 10-ந்தேதி ஜடாயு மோட்சம், 11-ந்தேதி சுக்ரீவ சரணாகதி, 12-ந்தேதி வாலி வதம், 13-ந்தேதி சுந்தரகாண்டம், 14-ந்தேதி அங்கதன் தூது, 15-ந்தேதி ராமர் பட்டாபிஷேகம் என்கிற பொருளில் தினசரி மாலையில் சொற்பொழிவு நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வர் கோவிந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×