search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேரை சுற்றி கண்ணாடி வளையம் பொருத்தப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    தேரை சுற்றி கண்ணாடி வளையம் பொருத்தப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேரை சுற்றி கண்ணாடி வளையம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந் தேரை சுற்றி கண்ணாடி வளையம் ரூ.11.30 லட்சம் செலவில் பொருத்தப்பட்டது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த தேரை அரிச்சந்திர மகாராஜா கோவிலுக்கு வழங்கியதாக செவிவழி செய்தி கூறுகிறது. ஒவ்வொருஆண்டும் பங்குனி விழாவின் 14-வது நாளில்் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க 3 கிலோ மீட்டர் சுற்றளவு கிரிவலப்பாதையில் இந்த தேர் வலம் வருவது சிறப்பாகும்.

    நீதியை நிலை நாட்டுவதை குறிக்கும் விதமாக ஆறுமுகப்பெருமான் தன் திருக்கரத்தில் தராசுடன் அருள்பாலிக்க கூடிய அற்புத சிற்பங்கள் உள்பட பல சிற்பங்கள் இந்த தேரில் காணப்படுகிறது.் இத்தகைய பழம் பெருமை வாய்ந்த தேரை வடம் பிடிப்பதற்காக திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள 38 கிராம ஊராட்சிகளில் முக்கியபிரமுகர்கள் மற்றும் நாட்டாண்மைகளுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கப்படுவதும் பாரம்பரிய பழக்க வழக்கமாக உள்ளது.



    இந்த தேரில் “ஹைட்ராலிக் பிரேக்”பொருத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு தேர் முழுவதுமாக மராமத்து பணி செய்யப்பட்டு புதிய சட்டங்கள் பொருத்தப்பட்டன. மேலும் பழமை மாறாமல் சிற்பங்கள் யாவும் நவீனமுறையில் அழகுப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் தேரை சுற்றி கண்ணாடி வளையம் பொருத்துவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோவில் பொது நிதியில் இருந்து ரூ. 11 லட்சத்து 30 ஆயிரம் செலவில் நேற்று கண்ணாடி வளையம் அமைக்கப்பட்டது.

    இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறும்போது, மழை வெயிலுக்காக தேரை சுற்றி தகரத்தால் பாதுகாப்பு வளையம் போடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நவீனவகையான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தேரில் உள்ள தெய்வீக சிற்பங்களை பக்தர்கள் பார்க்க முடியும் என்றார்.
    Next Story
    ×