search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவண்டாகுறிச்சி மகாமாரியம்மன் கோவில் திருவிழா
    X

    கோவண்டாகுறிச்சி மகாமாரியம்மன் கோவில் திருவிழா

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாகுறிச்சி மகாமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி, காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாகுறிச்சி கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான கடந்த 12-ந் தேதி காப்பு கட்டப்பட்டு, திருவிழா தொடங்கியது.

    கடந்த 18-ந் தேதி வரை தினமும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வரை மகாமாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், நெய் அபிஷேகம், பாலாபிஷேகம், மலர் அபிஷேகம், நிலத்தேர் அலங்காரம் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மதியம் பக்தர்கள் அலகு குத்தி, பால் குடம், அக்னிசட்டி, சக்திகரகம், காவடி எடுத்து, ஏரிக்கரையில் இருந்து கோவிலுக்கு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

    இதையொட்டி ஆங்காங்கே நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இரவில் மகாமாரியம்மன் அன்ன வாகனத்திலும், பூந்தேர் கரகமும் வீதி உலா நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) பகல் 12.30 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழாவுடன் சாமி குடிபுகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவையொட்டி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பட்டையதாரர்கள், முக்கியஸ்தர்கள், திருப்பணி குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×