search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகம் நடைபெற உள்ள தொங்குட்டிபாளையம் சுயம்பு காரணபெருமாள் கோவில்.
    X
    கும்பாபிஷேகம் நடைபெற உள்ள தொங்குட்டிபாளையம் சுயம்பு காரணபெருமாள் கோவில்.

    சுயம்பு காரணபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 30-ந் தேதி நடக்கிறது

    திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையத்தில் சுயம்பு காரணபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.
    திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே தொங்குட்டிபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபூமிதேவி, ஸ்ரீநீளாதேவி சமேத சுயம்பு காரணபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவில் 12 ராசிகளின் ஒன்றான கேதுவின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாக நம்பப்படுகிறது. கோவிலின் சுவர்களில் ஆமை மற்றும் மீன் சின்னங்கள் உள்ளது.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் தொழில் வளரவும், விவசாயம் செழிக்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு வேண்டுதல் வைக்கப்படுகிறது. பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுவதால் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த கோவிலின் அமைப்பே சற்று வித்தியாசமாக உள்ளது. அதாவது கிழக்கு பகுதியில் பள்ளம், மேற்கு பகுதியில் பாறை, வடக்கு பகுதியில் தொரட்டி மரம், தெற்கு பகுதியில் அரசமரம் தல விருட்சத்துடன் காணப்படுகிறது.



    இது எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகவும், மேலும் விவசாய தோட்டம் மற்றும் வீடுகளுக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும்போதும், புதிதாக ஏதாவது தொழில் தொடங்கும்போதும் இந்த கோவிலில் பக்தர்கள் சாமியின் சிரசில் பூ வைத்து குறி கேட்கும் வழக்கமும் பல ஆண்டுகளாக உள்ளது. தாங்கள் கேட்கும் சிரசு பூ குறி சரியாக வந்து விட்டால் அதை செயல்படுத்தினால் நல்ல முறையில் வளர்ச்சி இருக்கும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. பழமையான இந்த கோவில் திருப்பணி தொடங்கப்பட்டு விரைவாக பணிகள் நடைபெற்று வந்தது.

    தற்போது கோவில் திருப்பணி வேலைகள் முடிவுற்று கும்பாபிஷேகம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. முன்னதாக நேற்று யாக சாலை பூஜைகள் தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை(புதன்கிழமை) காலை 8 மணிக்கு மற்றும் மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி காலை 9 மணிக்கு விமான கோபுரங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×